நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார். இதற்கிடையில் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபீனிக்ஸ் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஷூட்டிங் உள்ளிட்ட பணிகள் எல்லாம் முடிந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.