'LIC' படம் பற்றி 12 மணி நேரம் உரையாடினோம்-எஸ்.ஜே.சூர்யா

சனி, 23 டிசம்பர் 2023 (16:47 IST)
லவ்டுடே  பிரதீப் ரங்க நாதன் மற்றும்  எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள படத்தைப் பற்றி நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒரு தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி, நானும் ரவுடிதான். தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதையடுத்து, லவ்டுடே  பிரதீப் ரங்கநாதன்   மற்றும்  எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையில், லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு எல்.ஐ.சி( love insurance corporation) என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் பிரதீப் ரங்க நாதனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளார் .

இப்படம் பற்றி நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளதாவது:

புதுகாதல் உலகத்திற்கு நம்மை அழைத்து செல்வதில் விக்னேஷ் சிவன் ஆர்வமாக உள்ளார். பட தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாகும். எல்.ஐ.சி பட தலைப்பை போலவே படமும் ஆச்சரியப்படுத்தும்.  நேற்று, 12 மணி நேரமாக பட பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் இப்படம் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்