ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பற்றி வெளியான தகவல்!

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (15:25 IST)
ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தியில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அது சம்மந்தமான போஸ்டரும் வெளியானது. இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவித்துள்ளார். அந்த படத்துக்கு ஓ சாத்தி லால் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த படம் இப்போது சில காரணங்களால் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் ஐஸ்வர்யா இயக்கத்தில் இந்த படத்தில் நடிக்க ரஜினி தயங்கியவதாகவும், ஆனால் ஐஸ்வர்யா அவரை சமாதானப்படுத்தி ஒத்துக்கொள்ள வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் சுமார் 20 நிமிடங்கள் வரை வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி சூப்பர் ஸ்டார் ஆன பிறகு அவர் கௌரவ வேடத்தில் நடித்த வள்ளி, குசேலன் ஆகிய படங்கள் பெரியளவில் ரசிகர்களைக் கவர்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்