இரவின் நிழல் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட பார்த்திபன்!

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (15:09 IST)
சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி ரசிகர்களைக் கவர்ந்த படங்களில் லெஜண்ட் மற்றும் இரவின் நிழல் ஆகியவை இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது.

இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் வெள்யாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆனால் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதையடுத்து இப்போது படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் இன்றோ நாளையோ வெளியாகும் என பார்த்திபன் முகநூல் பக்கத்தின் மூலமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்