நடித்த 3 படங்களும் ஹிட்… தனுஷ் படத்தில் இணைகிறாரா பிரியங்கா மோகன்? வெளியான தகவல்!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:05 IST)
நடிகை பிரியங்கா மோகன் இதுவரை தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன் மற்றும் டான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டாக்டர் படத்தின் வெற்றிக்கு நடிகை பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே போல சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன. ஒரு நடிகைக்கு முதல் மூன்று படங்களும் இப்படி அமைவது வெகு அபூர்வமானதே.

இந்நிலையில் பிரியங்கா மோகன் அடுத்து நெல்சன் இயக்கும் ரஜினி படத்தில் அவருக்கு மகளாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் மற்றொரு படம் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. தனுஷ் அடுத்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்