தனுஷ் கதாபாத்திரத்தை வைத்து தனிப்படம்… ‘தி கிரே மேன்’ இயக்குனர் சொன்ன சூப்பர் தகவல்!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (08:59 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் தி கிரே மேன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னர் பகிர்ந்திருந்தார். அதில் “இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ்” நடிக்கிறார் என்று பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. ஆனால் டிரைலரில் தனுஷுக்கான காட்சிகள் அதிகமாக இல்லை. இது இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமானதாக அமைந்தது. ஆனால் தற்போது நடந்த ஒரு கலந்துரையாடலில்  இந்த படத்தின் இயக்குனர்களில் ஒருவர் தனுஷின் கதாபாத்திரம் பற்றி தெரிவித்த கருத்துகள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியானதாக அமைந்துள்ளது.

அந்த கலந்துரையாடலில் “தனுஷ் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. மிகவும் கொடூரமான வில்லன் கதாபாத்திரம். அதை தனுஷ் சிறப்பாக செய்துள்ளார். முடிந்தால் அந்த கதாபாத்திரத்தைக் கொண்டு நாங்கள் ஒரு Spin off-ஐ உருவாக்க ஆர்வமாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்