எல்லா ஸ்டேட்டில் இருந்தும் ஆள் வந்தாச்சு… இன்னும் பாலிவுட்தான் பாக்கி – நெல்சனை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (09:10 IST)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில்  ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, சிவராஜ் குமார், மோகன் லால், சுனில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர்.

வரிசையாக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து வருகிறது. இதைப் பார்க்கும் ரசிகர்கள் தென்னிந்திய மாநில மொழிகளில் இருந்து டோலிவுட், மல்லுவுட் மற்றும் சாண்டல்வுட் என வரிசையாக நடிகர்கள் படத்தில் ஒப்பந்தமாகி வருகிறார்கள். இன்னும் பாலிவுட்டில் இருந்துதான் எந்த நடிகரும் ஒப்பந்தமாக வில்லை என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக நெல்சனின் பீஸ்ட் படத்தில் இதுபோல நல்ல நடிகர்களை சிறு வேடங்கள் கொடுத்து வீணாக்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்