ஜெயிலர் படத்தின் கதை பற்றி வெளியான சூப்பர் தகவல்… ரஜினிக்கு இதுதான் முதல் முறை!

வெள்ளி, 6 ஜனவரி 2023 (14:59 IST)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர ரம்யா கிருஷ்ணன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.  இந்நிலையில் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஜெயிலர் படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் படத்தின் கதையின் பெரும்பாலான பகுதி ஒரே நாள் இரவில் நடக்கும் விதமாக இயக்குனர் நெல்சன் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் விறுவிறுப்பான படமாக ஜெயிலர் இருக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்