ஜெயிலர் ஷூட்டிங் எப்படி போகுது?... அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

திங்கள், 9 ஜனவரி 2023 (09:23 IST)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில்  ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர ரம்யா கிருஷ்ணன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.  இந்நிலையில் ஷூட்டிங் மார்ச் மாதம் வரை நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் ரஜினிகாந்திடம் “ஜெயிலர் எப்படி போயிட்டு இருக்கு?” எனக் கேட்ட போது “நல்லா போயிட்டு இருக்கு” என தன் ஸ்டைலில் பதிலளித்து சென்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்