எதுவும் திருடு போகல.. ஏதோ கோவத்துல பேசிட்டேன்! - கஞ்சா கருப்பு வழக்கில் திடீர் திருப்பம்!

Prasanth Karthick

ஞாயிறு, 26 ஜனவரி 2025 (15:52 IST)

நடிகர் கஞ்சா கருப்பு சென்னையில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் திருட்டு போனதாக அளித்த புகாரில் தற்போது எதுவும் திருட்டு போகவில்லை என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக வலம் வருபவர் கஞ்சா கருப்பு. சிவகங்கையை சேர்ந்த கஞ்சா கருப்பு சென்னை மதுரவாயலில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வருகிறார். சென்னையில் சினிமா ஷூட்டிங் நடக்கும்போதெல்லாம் அவர் அந்த வீட்டில் தங்குவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் கஞ்சா கருப்பு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அதில் கஞ்சா கருப்பு வாடகையை ஒழுங்காக தராமல் இருப்பதோடு, வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும் அவர் கூறியிருந்தார், இதற்கு எதிர் வழக்கு தொடர்ந்த கஞ்சா கருப்பு, தான் வீட்டில் இல்லாதபோது வீட்டு உரிமையாளரும், அவரது நண்பர்களும் தனது வீட்டில் உள்ள பொருட்கள், தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருது போன்றவற்றை திருடி சென்றதாகவும் புகார் அளித்தார்.

 

இந்த புகாரில் போலீஸார் இருவரையும் அழைத்து பேசியதில் இருவரும் சமரசமாக செல்ல ஒத்துக் கொண்டனர். அப்போது கஞ்சா கருப்பு வீட்டை மூன்று மாதத்தில் காலி செய்து விடுவதாகவும், தனது வீட்டில் எந்த பொருளும் திருடு போகவில்லை என்று சொல்லியும் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்