மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்: அநாகரிக பேச்சு குறித்து இயக்குநர் மிஷ்கின்..!

Siva

ஞாயிறு, 26 ஜனவரி 2025 (15:58 IST)
சில நாட்களுக்கு முன்னால் இயக்குனர் மிஷ்கின், திரைப்பட விழா ஒன்றில் பேசியபோது, அநாகரிகமாகவும் அருவருப்பாகவும் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவரது பேச்சை மேடையில் இருந்த சில முன்னணி இயக்குனர்கள் கண்டிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் அருள்தாஸ் உட்பட ஒரு சிலர் மட்டுமே கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், தன்னுடைய பேச்சுக்காக வருத்தப்படுவதாகவும், மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். "என்னை வைத்து படம் தயாரிக்கும் தாணு அவர்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற பேச்சுக்கள் ஒரு தயாரிப்பாளராக அவர்களுக்கு பாதிக்கக்கூடும்," என்று தெரிவித்தார்.

"என் மேல் செருப்பை எறிய வேண்டும் என்று கூறிய என்னுடைய நண்பர்  அவர்களிடமும் மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில், என் மேல் செருப்பு எறியும் போது, இரண்டு செருப்பை எறியுங்கள்; அதுவும் எட்டாம் நம்பர் செருப்பு எறியுங்கள்,  அப்பொழுதுதான் நான் அதை அணிந்து கொள்வேன்," என்றும் குறிப்பிட்டார்.

"இன்னொரு நபர் 18 வருடமாக என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்; இன்னும் பத்து வருடம் நான் படம் எடுத்தாலும் என்னை திட்டுவார். அவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கிராமங்களில் நடக்கும் கூத்துகளில் ஒருவர் வந்து கெட்ட வார்த்தைகளுடன் நகைச்சுவை பேசுவார்; அதுவும் பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாகவே இருக்கும். அது போல தான் நான் பேசினேன். யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பதற்காக பேசவில்லை," என்றும் மிஷ்கின் தெரிவித்தார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்