ஜெயிலர் படத்தில் இணைந்த அடுத்த பிரபல நடிகர்…. சன் பிக்ஸர்ஸ் கொடுத்த அப்டேட்!

புதன், 18 ஜனவரி 2023 (09:48 IST)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில்  ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர ரம்யா கிருஷ்ணன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.  இந்நிலையில் ஷூட்டிங் மார்ச் மாதம் வரை நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் சுனில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்