ரஜினிக்கு இமாலய ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைகோர்க்கும் மிர்ச்சி சிவா!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (15:29 IST)
ரஜினியை வைத்து அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இப்போது மிர்ச்சி சிவாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி கதாநாயகனாக உருவாகி வந்த மிர்ச்சி சிவா ஒரு கட்டத்தில் தோல்வி படங்களாக கொடுத்ததால் பீல்டில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு ஹிட் கொடுத்து கதாநாயக அந்தஸ்தை பெற வேண்டும் என கதைகளை கேட்டு வருகிறார்.

அந்த வகையில் ரஜினியை வைத்து அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட 5 படங்களை இயக்கிய மூத்த இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்