எஸ்பிபி பாடலை பாடி கூட்டுப்பிரார்த்தனை: கமல், ரஜினி உள்பட பிரபலங்கள் பங்கேற்பு

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (13:29 IST)
எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை பாடி கூட்டுப் பிரார்த்தனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பிரார்த்தனையில் கமல், ரஜினி உள்பட திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவருக்காக ஏற்கனவே பல்வேறு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது ஒரு கூட்டுப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி அதாவது நாளை மாலை 6.05 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டு பிரார்த்தனையில் கமலஹாசன், ரஜினிகாந்த், பாரதிராஜா, இளையராஜா, ஏஆர் ரகுமான், வைரமுத்து உள்பட பலர் தங்களது வீடுகளிலிருந்து கலந்து கொள்ள உள்ளனர் 
 
மேலும் பல திரையுலக முக்கிய பிரமுகர்களும் ரசிகர்களும் இந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரார்த்தனையின் போது எஸ்பிபி பாடல்கள் பிரபலங்கள் பாடிப் பிரார்த்தனை செய்ய உள்ளதாகவும் இந்த பிரார்த்தனை மூலம் எஸ்பிபி குணமடைவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பாரதிராஜா இந்த கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார் 
 
நாளை நடைபெற இருக்கும் இந்த கூட்டுப் பிரார்த்தனை மூலம் எஸ்பிபி மீண்டு வருவார் என்ற நம்பிக்கையை அனைவரிடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்