கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்து வரும் சூர்யாவுக்கு இப்போது உடனடித் தேவை ஒரு ஹிட் படம். அதை இந்த ரெட்ரோ படம் கொடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை வெளியானப் பாடல்களும், டிரைலரும் அதை உறுதி செய்துள்ளன. இந்நிலையில் படத்துக்கான முன்பதிவு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் படத்தின் முன்பதிவு தொடங்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.