இன்னும் போனி ஆகாத மார்க் ஆண்டனி… ரிஸ்க் எடுக்கும் தயாரிப்பாளர்!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (08:17 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று பேன் இந்தியன் ரிலீஸாக வெளியாகிறது.

இந்த படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஓடும் நேரம் 2 மணிநேரம் 31 நிமிடங்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் இன்று ரிலீஸ் ஆகும் நிலையில் இன்னும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமை மற்றும் இந்தி சேட்டிலைட் உரிமை ஆகியவை விற்பனை ஆகவில்லை என சொல்லப்படுகிறது.

ஆனாலும் துணிந்து படத்தை ரிலீஸ் செய்கிறார் படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார். ஒருவேளை படம் ரிலீஸாகி நல்ல பாராட்டுகளைப் பெறும் பட்சத்தில் இந்த உரிமைகள் விற்பனையாக வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்