பாதியாக உடைந்து ஜெட் விமானம் விபத்து.,..அதிர்ச்சி சம்பவம்

வியாழன், 14 செப்டம்பர் 2023 (20:19 IST)
மும்பை விமான நியைத்தில் தரையிரங்கிய  ஜெட்விமானம் ஒன்று ஓடுபாதையில் சறுக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் இன்று  மாலை  மணிக்கு ஜெட்விமானம்  ஒன்று தரையிறங்கியபோது, ஓடுபாதையில் சறுக்கி விபத்து ஏற்பட்டது.

இதில், ஜெட் விமானத்தில் பயணித்த  ஆறுபயணிகள்,2 பணியாளார்கள் என மொத்தம் 8 பேர் பயணித்த நிலையில், அனைவரும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இவ்விபத்தில், உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும், மும்பை விமான நிலையத்தில் மழை பெய்ததால் தான் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

இவ்விபத்தில் ஜெட் விமானத்தில் தீ பற்றிய நிலையில், மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இந்தச் சம்பவம் அங்குப் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்