‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (19:01 IST)
வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’  திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
 
வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது 
 
இந்த நிலையில் இந்த படம் சென்சாருக்கு சென்றதாக கூறப்படும் நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷனையும் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேலு இந்த படத்தின் புரமோஷனை மிகவும் சிறப்பாக செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்