தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். 30 வருடங்களும் மேல் சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. கோலிவுட்டில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜயே இருக்கிறார். கோட் படத்தில் 200 கோடி சம்பளம் வாங்கிய விஜய் இப்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்துக்கு 250 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்கிறார்கள்.
ஜனநாயகன் என்னுடைய கடைசிப்படம் என விஜய் அறிவித்திருக்கிறார். இந்த படம் முடிந்தபின் விஜய் தீவிர அரசியலில் இறங்குவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வர் என சொல்கிறார்கள். விஜய் எப்போது அரசியலுக்கு போகப்போகிறேன் என சொன்னாரோ அப்போதிலிருந்து அவரின் பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்ய துவங்கிவிட்டார்கள்.
அதிலும், கில்லி படம் ரீ-ரிலீஸில் 20 கோடி வரை வசூலை குவிக்க இப்போது விஜயின் பல படங்கள் வரிசையாக வெளியாகவுள்ளது. ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடித்து 2005ம் வருடம் வெளியான திரைப்படம்தான் சச்சின். இந்த படத்தில் ஜெனிலியா, வடிவேலு ,ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
ரஜினியின் சந்திரமுகி படத்தோடு இந்த படம் வெளியானது. சந்திரமுகி சூப்பர் ஹிட் அடிக்க சச்சின் படம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை என அப்போது செய்திகள் வெளியானது.
இந்நிலையில்தான், ஏப்ரல் 18ம் தேதியான இன்று சச்சின் படம் தமிழகத்தில் உள்ள பல தியேட்டர்களிலும் ரிரிலீஸ் ஆகியிருக்கிறது. ஃபிரி புக்கிங்கிலேயே இப்படம் 1.5 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. எனவே, கில்லியை போல சச்சின் படமும் ரீ-ரிலீஸில் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது.