பூஜா ஹெக்டே இதற்கு முன் அப்படி நடித்ததில்லை… அந்த ஒரு காட்சிதான் – ரெட்ரோ சீக்ரெட் பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்!

vinoth

சனி, 19 ஏப்ரல் 2025 (08:08 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பேசும்போது “இந்த படத்துக்கு ஒரு நல்ல perfomer தேவைப்பட்டார். பூஜா ஹெக்டே இதற்கு முன்னர் அதுபோன்ற வேடங்களில் நடித்ததில்லை. ஆனால் அவர் நடித்த ’ராதே ஷ்யாம்’ படத்தில் ஒரு காட்சியைப் பார்த்த பின்னர் அவர் இந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என நம்பினேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்