அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் 8 நாளில் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாடுகளில் இருந்து வந்த வசூல் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை குட் பேட் அக்லி நிகழ்த்தியுள்ளது.