அஞ்சான் படத்துக்குப் பின் ரெட்ரோவில் மீண்டும் பாடகர் ஆன சூர்யா… !

vinoth

சனி, 19 ஏப்ரல் 2025 (08:28 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் இசை மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் படத்தின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. அப்போது Love Detox என்ற பாடலை சூர்யாதான் பாடியுள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்த பாடலுக்கு திரையில் சூர்யா மற்றும் ஸ்ரேயா ஆகியோர் நடனமாடியுள்ளனர். அஞ்சான் படத்தின் ‘ஏக் தோ தீன் சார்’ என்ற பாடலை சூர்யா பாடியிருந்தார். அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து ரெட்ரோ படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்