லியோ படத்திற்கு டிக்கெட் முன்பதிவு தொடக்கம்! இப்பவேவா? – கலெக்ஷன் அள்ளும் போல இருக்கே!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:15 IST)
விஜய் நடிப்பில் லியோ லோகேஷ் இயக்கி வரும் லியோ திரைப்படம் இந்த ஆண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்போது லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படம் ரிலீஸாக இன்னும் 6 வாரங்களுக்கு மேல் உள்ள நிலையில் இப்போதே படத்துக்கான முன்பதிவு இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. 6 வாரங்களுக்கு முன்பே ஒரு தமிழ்ப் படத்துக்கு முன்பதிவு இங்கிலாந்தில் தொடங்கி இருப்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடிக்கின்றன. விக்ரம் ஹிட்டுக்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் என்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்