இதையடுத்து, மாணவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் இலவச கல்வி பயிலகம் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, இலவச சட்ட ஆலோசனை மையம் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தின், மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபபெற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட 1000 பேர் பங்கேற்றனர்.