சர்தார் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (18:53 IST)
கார்த்தி நடித்த சர்தார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது
 
 இந்த நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டது. 
 
ஆஹா ஓடிடி நிறுவனம் சர்தார் டிஜிட்டல் உரிமைக்காக ரூபாய் 20 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது 
 
கார்த்தியின் திரைப்படம் ஒன்று இவ்வளவு பெரிய தொகையை டிஜிட்டல் உரிமை விற்பனையானது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
கார்த்தி, ரஜிஷா விஜயன், சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கும் இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்