விடுதலை, கருடன், கொட்டுக்காளி மற்றும் விடுதலை 2 என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் சூரி. தற்போது மாமன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதையடுத்து சூரி விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் இணை இயக்குனரும், செல்ஃபி படத்தின் இயக்குனருமான மதிமாறன் இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு மண்டாடி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடலை சுற்றியக் கதைக்களமாக படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தொடக்க விழாவில் பேசிய சூரி “மண்டாடி திரைப்படம் படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகும் கதை. இந்த கதையை வெற்றிமாறன் அண்ணன்தான் எனக்கு சொல்லி நடிக்க சொன்னார். படகுப் போட்டி இன்னும் நடக்கிறது என்பதே எனக்குத் தெரியாது. இப்படி வெளித்தெரியாத ஒரு கதைக்களத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.