ஏற்கனவே திருமணம் நிகழ்ச்சியை நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்டோர் தனியார் ஓடிடி தலங்களுக்கு விற்பனை செய்த நிலையில், தற்போது அமீர் பாவனியின் திருமணத்தையும் முன்னணி ஊடகம் ஒன்று கவர் செய்வதற்காக பெரிய தொகையை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திருமண நிகழ்ச்சியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வேறு எந்த சமூக வலைதளங்களில் வந்தாலும் அவை பிளாக் செய்யப்படுவதாகவும், முழுக்க முழுக்க அந்த ஒரு சேனல் மட்டுமே இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட உரிமை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு செலிபிரிட்டியின் திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நெட்டிசன்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்வது சகஜமான ஒன்றாக இருந்த நிலையில், இந்த கட்டுப்பாடு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.