நடிகை தமன்னா பெண் சாமியாராக நடித்த திரைப்படம் சமீபத்தில் ரிலீசான நிலையில், அந்த படம் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகி இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, பாலிவுட்டிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் அவர் ஒடேலா 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் பெண் சாமியாராக நடித்திருந்த நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியானது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, இந்த படம் விமர்சன ரீதியில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், படுதோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 25 கோடி ரூபாய் என்று புறப்படும் நிலையில், முதல் இரண்டு நாட்களில் இந்த படம் வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாகவும், நான்கு நாட்களில் 6 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.