நடிகர் சூர்யா நடித்த "ரெட்ரோ" திரைப்படம் வரும் மே ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது, இதன் பின் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா வட இந்தியாவில் உள்ள கோவிலுக்கு இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று சென்று வருகிறார்கள், இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஜோதிகா தஞ்சை பெரிய கோவிலுக்கு செலவு செய்வது போல், மருத்துவமனைகளுக்கு செலவிடவேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேசியதற்கு இந்துமத பிரபலங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இப்போது, நெட்டிசன்கள் சூர்யா மற்றும் ஜோதிகா கோவிலுக்கு சென்று வரும் புகைப்படத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். "உங்கள் படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்து கோவிலுக்கு செல்வீர்கள், வெற்றியடைந்த பிறகு இந்து கோவிலை விமர்சனம் செய்வீர்கள்" என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும், "கங்குவா" திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், "ரெட்ரோ" படம் வெற்றி பெற்றால் மட்டுமே சூர்யா அவருடைய கம்பெக் கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.