ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது ‘டாணாக்காரன்’: விரைவில் அறிவிப்பு

செவ்வாய், 15 மார்ச் 2022 (17:30 IST)
நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி சில மாதங்கள் ஆகிறது என்பதும் இந்த படத்தின் டீஸர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் ‘டாணாக்காரன்’  திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
விக்ரம்பிரபு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்து உள்ளார் என்பதும் இந்த படத்தை கார்த்திக் என்பவர் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகிய ஏற்கனவே ’வெள்ளைக்கார துரை’ என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளனர் என்பது தெரிந்ததே.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்