இல்லத்தரசிகளுக்கு ஊதியம்… கமலின் திட்டத்துக்கு கங்கனா எதிர்ப்பு!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (13:09 IST)
நடிகர் கமல்ஹாசன் தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் திட்டம் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் தரப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சசி தரூர் எம்பி ஆகியவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதை விமர்சிக்கும் விதமாக பேசியுள்ள நடிகை கங்கனா ரனாவத் ‘அன்புக்குரியவர்களுடன் கொள்ளும் உறவுக்கு விலை அட்டையை ஒட்டாதீர்கள் . எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்ப்பதற்குச் சம்பளம் எதுவும் தேவையில்லை. எங்கள்  குட்டி ராஜ்ஜியத்தில் நாங்கள் ராணியாக இருக்க சம்பளம் தரவேண்டாம். இதையெல்லாம் தொழிலாகவும் பார்க்காதீர்கள். இதற்குப் பதிலாக உங்கள் மனைவியிடம் அல்லது நேசிக்கும் பெண்ணிடம் சரணாகதி ஆகிவிடுங்கள். அவர்களுக்குத் தேவை மரியாதையும் அன்பும்தான். சம்பளம் அல்ல.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்