10 நாளில் 4 லட்சம் கோழிகள் இறப்பு… பறவைக் காய்ச்சலா என சோதனை!

புதன், 6 ஜனவரி 2021 (12:34 IST)
ஹரியானா மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 4 லட்சம் கோழிகள் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் இன்னும் கொரோனா வைரஸ் தாக்குதல் முழுமையாகக் கட்டுக்குள் வராமல் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைகளுக்கு மர்ம வைரஸ் மூலமாக காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பது அதிகமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வட இந்திய மாநிலங்களின் கடும் குளிர் காரணமாக இந்த வைரஸ் பரவுவது அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

மனிதர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் தீவிர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கோழிப் பண்ணை உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 4 லட்சம் கோழிகள் மரமமான முறையில் இறந்துள்ளன. இவற்றின் மரணத்துக்கு பறவைக் காய்ச்சல்தான் காரணமா என்பது குறித்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்