கொரோனா தொற்று இருந்தும் அரசு மருத்துவமனைக்கு வர மறுத்த நடிகை!

புதன், 6 ஜனவரி 2021 (12:57 IST)
நடிகை பனிதா சந்து கொரோனா பாதிப்பு இருந்தும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறமாட்டேன் என அடம்பிடித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக ஆதித்யா வர்மா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பனிதா சந்து. அதன் பின்னர் அவருக்கு புதிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வாய்ப்புகளை இழுக்கும் வகையில் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை அவர் வெளியிட ஆரம்பித்துள்ளார். இவர் படப்பிடிப்பு ஒன்றுக்காக கொல்கத்தாவுக்கு விமானத்தில் சென்ற போது அந்த விமானத்தில் லண்டனில் இருந்து வந்த பயணி ஒருவருக்குக் கொரோனா இருப்பது உறுதியானது. அதையடுத்து அந்த விமானத்தில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் பனிதாவுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள பெலகாட்டா அரசு கரோனா தொற்று மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இருக்காது எனக் கூறி ஆம்புலன்ஸை விட்டு இறங்க மறுத்துள்ளார். இதையடுத்து அங்கே சலசலப்பு உருவானதை அடுத்து அவர் காவல்துறையினர் உதவியோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்