ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் நெல்சனுக்கு ரஜினி கொடுத்த அட்வைஸ்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (15:49 IST)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில்  ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர ரம்யா கிருஷ்ணன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.  இந்நிலையில் ஷூட்டிங் மார்ச் மாதம் வரை நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பீஸ்ட் தோல்வியால் இந்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என நெல்சன் கடுமையாக உழைப்பதைப் பார்த்து ரஜினி அழைத்து “ரிலாக்ஸாக வேலை பாருங்கள். இந்த படம் நல்லா போகும்” என அட்வைஸ் செய்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்