லியோ படத்துக்கு அதிகாலை காட்சிகள்… வழக்கு தொடர்கிறாரா லலிதகுமார்?

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (10:35 IST)
விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் தயாரித்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவை மேற்கொள்ள அனிருத் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது

சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விஜய்யின் திரைப்பட வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக உருவாகியுள்ளது.  ஏற்கனவே விஜய் லோகேஷ் இணைந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து லியோ படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் காலை 9 மணிக்கு மேல்தான் சிறப்புக் காட்சியை திரையிட வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்நிலையில் அதிகாலைக் காட்சிகளுக்கு ஏற்கனவே டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அதிகாலை காட்சிக்கு அனுமதி வேண்டும் என லியோ தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகவுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்