''டிஜிட்டல் கரன்சி நாளை அறிமுகம்''- ரிசர்வ் வங்கி

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (19:31 IST)
சோதனை முறையில்   நாளை  டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 
நவீன காலத்தில் உலக நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலானோர் கிரிப்டோ கரன்சியின் பக்கள் கவனத்தைச் செலுத்து வரும் நிலையில்,  இதில் முதலீடு செய்த பலர் ஏமாற்றங்களைச் சந்துள்ளனர்.

இதுகுறித்து, அரசு பலமுறை எச்சரித்தும்  சிலர் இந்த கிரிப்டோ கரன்சியின் மீதான மோகம் காரணமாக இன்னும் ஏமாற்றத்தைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

 
இந்த  நிலையில், மத்திய அரசு டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யவுள்ளது.  ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் 2022-2023 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையயின் போது, டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.

சமீபத்தில்,  விரைவில் டிஜிட்டல் ரூபாய்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியது. மேலும்,இது சோதனை முயற்சி என்று குறிப்பிட்டது.

அதன்படி, இன்று  ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், சோதனைமுறையில் நாளை டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், எஸ்பிஐ, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா,ஹெச்.சி.எஃப்.சி உள்ளிட்ட 9வங்கிகளில் இந்த ட்ஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் வரவேற்பைப் பொறுத்து டிஜிட்டல் கரன்சியின் அடுத்தகட்ட திட்டங்கள் பற்றி மத்திய அரசு வெளியிடும் என தெரிவிகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்