வங்கி கடனுக்கான வட்டி விகிதம் திடீர் அதிகரிப்பு! – அதிர்ச்சியில் மக்கள்!

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (10:58 IST)
வங்கிகளில் பெறப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் பல்வேறு வகையான தேவைகளுக்கும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது உலகளாவிய சூழலில் பணவீக்கம் விகிதம் அதிகரித்து வருவதால் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5% உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.9% ஆக இருந்த நிலையில் அது 5.4% ஆக உயர்ந்துள்ளது.

வங்கிகளின் ரெப்போ வட்டி விகித உயர்வால் வீடு, கார், தொழில் கடன்களுக்கு வங்கியில் வட்டி உயரும் அபாயம் உள்ளதாக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்