ஆச படலாம், பேராச பட்டா... தோல்விக்கு ரஜினியை உதாரணம் காட்டும் பாரதிராஜா?

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (11:43 IST)
ரஜினிகாந்தின் தர்பார் நஷ்டத்துக்கு என்ன காரணம் என பாரதிராஜா தகவல் வெளியிட்டுள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டம் ஏற்பட்டதாக இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.  இவர்கள் கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸை சந்திக்க முயற்சி செய்தும் வருகின்றனர் என தெரிகிறது. 
 
இந்நிலையில் தர்பார் திரைப்படம் நஷ்டம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் மிகப்பெரிய லாபத்தை அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் கொடுத்திருப்பதாகவும் ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.
படம் வெளியான 4 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்திருப்பதாக லைகா நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தற்போது ரஜினியின் நண்பரான பாரதி ராஜா தர்பார் திரைப்படத்தை வெளியிட்டோருக்கு நஷ்டம் ஏற்பட்டதற்கு அவர்களின் பேராசையே காரணம் என தெரிவித்துள்ளார். 
 
பாரதிராஜா விநியோகஸ்தர்களின் பேராசை என இதை குறிப்பிட்டது போல இருக்கும் நிலையில் சிலரோ அவர் ரஜினியை குறிப்பிடுகிறார் என பேசி வருகின்றனர். இதற்கு முன்னர் ரஜினிகாந்த் ஒரு எளிமையான நபர். என்னுடைய நண்பர். ஆனால், தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது.  
 
கர்நாடகத்தை கர்நாடககாரந்தான் ஆள வேண்டும் என்பது விதி. அதேபோல் தமிழகத்தை ஏன் மண்ணின் மைந்தன் ஆளக்கூடாது? வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்க முடியாதோ, அதேபோல் ரஜினி ஆள நினைப்பதையும் ஏற்க முடியாது. தான் ஒரு தமிழ்நாட்டுக்காரர் என ரஜினி சொன்னாலும் அவர் வாழ வந்தவர்; தமிழர் இல்லை என பாரதிராஜா ரஜினியை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்