டெல்லி கணேஷின் அன்பை இழந்துவிட்டேன்… வடிவேலு உருக்கம்!

vinoth
திங்கள், 11 நவம்பர் 2024 (09:37 IST)
தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் எனக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற விளங்கி வந்தவர் டெல்லி கணேஷ். திருநெல்வேலியில் பிறந்த இவர் டெல்லியில் சில ஆண்டுகள் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கியங்கிய நாடக உலகில் நுழைந்து நடிகரானார். அதன் பின்னர் பாலச்சந்தர் அவரை ‘பட்டினப் பிரவேசம்’ படத்தில் அறிமுகப் படுத்தினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அவர் பல நினைவுகூறத்தக்க படங்களை நடித்துள்ளார். சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வடிவேலு பேசும்போது “எனக்குப் பிடித்த எத்தனையோ நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேஷும் ஒருவர். அவரின் யதார்த்தமான நடிப்பையும் அன்பையும் இப்போது நான் இழந்து நிற்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய போது அவர் கொடுத்த அறிவுரைகளை எல்லாம் மறக்க முடியாது. அவர் சொன்ன சம்பவத்தை வைத்துதான் நேசம் புதுசு படத்தில் ‘கையப் பிடிச்சி இழுத்தியா’ காமெடியாக உருவாகுச்சு” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்