இந்நிலையில் அவரின் மூத்த மகன் தனுஷுக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷிதா என்ற பெண்ணோடு ஜப்பானில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் “நெப்போலியன் சார், என்னுடைய கடினமான காலங்களில் நீங்கள் என் கூட இருந்துள்ளீர்கள். உங்கள் மகன் கல்யாணத்தில் நான் கூட இருந்து எல்லா வேலைகளையும் செய்திருக்கணும். அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தனுஷ் தம்பிக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்த திருமணம் உங்க மனது மாதிரியே நல்ல படியா நடக்கட்டும். விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன் சார்” எனக் கூறியுள்ளார்.