சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் 2002ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி படுதோல்வி அடைந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சங்கவி, கருணாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி என பெரிய நடிகர் பட்டாளமே நடித்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார். ரஜினிகாந்தே தயாரித்திருந்தார்.
இந்நிலையில் பாபா படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்த பூவிலங்கு மோகன் ரஜினி பற்றி பகிர்ந்துள்ள சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் “பாபா ஷூட்டிங்கில் நான் நடித்தபோது என்னை பக்கத்தில் உட்கார வைத்து சீரியல்ல எல்லாம் எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க என்று ரஜினி சார் கேட்பார். நான் ஒரு நாளைக்கு 3000 ரூபாய் என்றேன். ரொம்ப கஷ்டம்ல என்று வருத்தப்பட்டு பேசினார். அப்புறம் பாபா படத்துக்கான சம்பளம் எனக்கு வந்தது. ஒரு நாளைக்கு 3000 ரூபாய் கொடுத்திருந்தார் ரஜினி சார். அவர் நல்ல பிஸ்னஸ் மேன்.” எனக் கூறியுள்ளார். சீரியலில் அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டு அதே அளவு சம்பளத்தையே பாபாவுக்கும் அவர் கொடுத்துள்ளார். வழக்கமாக சீரியலை சினிமாவில் அதிக சம்பளம் நடிகர்களுக்குக் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.