பட்ஜெட் 20 கோடியா? பேன் இந்தியா ரேஸில் இறங்கும் ஜி வி பிரகாஷ்!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:23 IST)
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர் ஜி வி பிரகாஷ். அவர் இசையமைப்பில் விரைவில் அவரின் 100 ஆவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகராகவும் 25 படங்கள் என்ற மைல்கல்லை எட்ட உள்ளார்.

ஜி வி பிரகாஷ், சில ஆண்டுகளுக்கு முன்னர் மதயானைக் கூட்டம் என்ற திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாக அந்த படம் விவாதங்களை உருவாக்கினாலும், வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. அதையடுத்து இப்போது மீண்டும் படத்தயாரிப்பில் இறங்குகிறார்.

கிங்ஸ்டன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஏற்கனவே ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவான காதலிக்க யாரும் இல்லை என்ற படத்தை இயக்கிய கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஜி வி பிரகாஷின் நடிப்பில் உருவாகும் 25 ஆவது படமாக அமையும் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு கிங்ஸ்டன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு பட்ஜெட்டாக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பேன் இந்தியா படமாக இந்த படம் உருவாவதால் பட்ஜெட் அதிகமாக போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்