விஜய் வெற்றிமாறன் கூட்டணி எப்போது அமையும்? இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தகவல்!

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:08 IST)
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். அதையடுத்து அவர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து அவர் இயக்கத்தில் வடசென்னை 2, கமல்ஹாசனுக்கு ஒரு படம் என பிஸியாக உள்ளார்.

இதற்கிடையில் அவர் நடிகர் விஜய்க்கும் கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் அடிக்கடி வெற்றிமாறனை சென்று சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்  வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ்குமார் இருவரும் இணையும் படம் பற்றி பேசியுள்ளார். அதில் ”இருவரும் இணைவது பற்றி நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காலம் ஒத்துழைக்க வேண்டும். இருவரும் இப்போது படங்களில் பிஸியாக உள்ளனர். இருவருக்கும் இடைவெளி கிடைத்தால் கட்டாயம் இந்த கூட்டணி அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்