இடையில் அவர் நடிகராகவும் களமிறங்கிய 25 படங்கள் வரை நடித்துள்ளார். இப்போது நடிப்பு, இசை என இரண்டிலும் பிஸியாக வலம் வருகிறார். இப்போது சூர்யாவின் கங்குவா, சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் எனக் கைவசம் பல படங்களை கையில் வைத்துள்ளார்.
இந்நிலையில் டிவிட்டரில் ரசிகர் ஒருவர் அவர் முதல் முதலாக இசையமைத்த இந்தி படமான கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் இசைத் துணுக்கை பகிர்ந்து சிலாகித்திருக்க, அவருக்கு பதிலளித்த ஜி வி பிரகாஷ் மீண்டும் விரைவில் அனுராக் காஷ்யப்போடு இணைந்து பணியாற்ற உள்ளேன்” எனக் கூறி பதிலளித்துள்ளார். கேங்ஸ் ஆஃப் வாசேபூர் படத்தில் ஜி வி பிரகாஷின் இசை பெரிய அளவில் பாராட்டுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.