அனிருத் உடன் இணைவதை உறுதி செய்த யுவன் ஷங்கர் ராஜா!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (07:11 IST)
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ரசிகர்களிடம் “நான் எந்த இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதை விரும்புகிறீர்கள்” எனக் கேட்க அதற்கு ரசிகர்கள் பலரும் பல இசையமைப்பாளரின் பெயர்களை பரிந்துரைத்தனர்.

அதில் அதிகமாக அனிருத் பெயர் இருக்க உடனே யுவன் அனிருத்திடம் “ரசிகர்கள் நாம் இணைவதை விரும்புகிறார்கள். Collab பண்ணலாமா?” எனக் கேட்க, உடனடியாக அனிருத் “பண்ணிடுவோம் வாங்க Lets Blast” என பதிலளித்துள்ளார். அவர்கள் இருவரின் இந்த உரையாடல் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்