கொம்பன் இயக்குனரின் வெப் சீரிஸ் முயற்சி… ஹீரோ அவர் இல்லையா?

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (18:20 IST)
இயக்குனர் கொம்பன் முத்தையா விக்ரம் பிரபுவை வைத்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் கார்த்தி நடித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கொம்பன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் கௌதம் கார்த்தியை வைத்து இயக்கிய தேவராட்டம் திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றது.

இதையடுத்து கௌதம் கார்த்தியோடு மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இடையில் கார்த்தியை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க ஆயத்தமானார். இப்போது சன் நெக்ஸ்ட் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்