சிவகார்த்திகேயன் பட டைட்டிலைதான் விஜய் படத்துக்கு வைக்க நினைத்தார்களாம்…. கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

திங்கள், 14 செப்டம்பர் 2020 (17:24 IST)
நடிகர் விஜய்யின் 50 ஆவது படமான சுறாவுக்கு முதலில் படகோட்டி அல்லது நம்ம வீட்டுப்பிள்ளை என்றே டைட்டில் வைக்க நினைத்தார்களாம்.

விஜய், தமன்னா மற்றும் வடிவேலு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவரது 50வது படமான சுறா வெளியானது. இந்த படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமில்லாமல் விஜய்யின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் கேலி செய்யப்பட்டன. மொத்தத்தில் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகவும் மோசமான படமாக அது அமைந்தது.

இந்த படத்துக்கு முதலில் எம்ஜிஆர் படத்தின் தலைப்பான படகோட்டி என வைக்க நினைத்தார்களாம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதை தர மறுத்துவிடவே எங்க வீட்டுப் பிள்ளையை உல்டா பண்ணி நம்ம வீட்டுப்பிள்ளை என வைக்க நினைத்தார்களாம். ஆனால் கடைசி நேரத்தில் இயக்குனர் எஸ் பி ராஜ்குமார் சுறா என வைத்தாராம். அதன் பின்னர் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப்பிள்ளை என்ற பெயரில் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்