ஆண்ட்ரியா பட டைட்டிலை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

திங்கள், 14 செப்டம்பர் 2020 (17:16 IST)
ஆண்ட்ரியா பட டைட்டிலை வெளியிட்ட விஜய் ஆண்டனி!
தளபதி விஜய்யுடன் நடிகை ஆண்ட்ரியா நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தை அழகு கார்த்திக் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அஜேஷ் இசையில் ரமேஷ் ஒளிப்பதிவில் பிரதீப் எடிட்டிங்கில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 
 
இந்த படத்தின் டைட்டில் ’நோ எண்ட்ரி’ என்று வைக்கப்பட்டுள்ளது. நடுகாட்டில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு இருக்கும் ஆண்ட்ரியாவும் அதைச்சுற்றி வேட்டை நாய்கள் காத்திருப்பது போல் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்