எத்தனை கோடி கொடுத்தாலும் பிக்பாஸ் வீட்டுக்கு போக மாட்டேன். பிரபல நடிகை

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (22:30 IST)
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதுப்புது முகங்களை பார்க்கலாம் என்று நினைத்தால் ஏற்கனவே பார்த்து பார்த்து கடுப்பான போலி ஜூலி, டிரிகர் சக்தி மற்றும் ஆர்த்தி ஆகியோர் மீண்டும் வந்து கடுப்பேற்றி வருகின்றனர்.



 
 
சரி புதிய பங்கேற்பாளர்களாவது தேறுவார்கள் என்று பார்த்தால் பிந்துமாதவி, ஹரீஷ், ஆகியோர் சாதாசோதாவாகவும், சுஜா நடிப்புலக ராணியாகவும் இருக்கின்றார்.
 
இந்த நிலையில் ஒரு பிரபல நடிகை பிக்பாஸ் வீட்டுக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் வரமுடியாது என்று கூறிவிட்டாராம். அவர் பெயர் தாவோலீனா, அவர் மறுத்தது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி. 
 
சல்மான்கான் தொகுத்து வழங்கவுள்ள இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது பாகம் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தேவலீனாவிடம் அணுகியபோது அவர் மறுத்துவிட்டாராம். ஆனால் சல்மான்கானுடன் திரையில் நடிக்க என்றால் ஓகே என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்