இந்த நிலையில் தெலுங்கில் நடித்த அதே கேரக்டரில் நீங்களே நடிக்க வேண்டும் என்று தமன்னாவிடம் படக்குழுவினர் அணுகினார்களாம். ஹீரோ பேரை கேட்டதும் கடுப்பான தமன்னா, 'நான் 1000 கோடி வசூல் செய்த படத்தில் நடித்த பெரிய நடிகை, அந்த சின்னப்பையனுக்கு நான் ஜோடியா? என்று கேட்டு, படக்குழுவினர்களை தமன்னா விரட்டி அடித்துவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் கடந்த சில மணி நேரங்களாக கோலிவுட்டின் ஹாட் டாக் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.